• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு !

March 27, 2018 தண்டோரா குழு

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை  தலைமை தேர்தல் ஆணையர்  அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கர்நாடக சட்டப்பேரவை மே 28ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்,224 தொகுதிகள் கொண்ட  கர்நாடக சட்டபேரவைக்கு மே12 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்  தேர்தலில் பதிவான வாக்குகள் மே15ல் எண்ணப்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரசாத் ராவத்
அறிவித்துள்ளார்.

மேலும், 4.96 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 56,696 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர் உதவி மையம் அமைக்கப்படும். 28 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வேட்பாளர் அதிகபட்சமாக செலவு செய்ய முடியும். கண்காணிப்பு குழு பறக்கும் படை அமைக்கப்படவுள்ளன.அனைத்து வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஏப்ரல்17ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனு தாக்கல் 24ல் நிறைவு பெரும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது என தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கான விதிமுறைகள் இன்று முதல் அமல் – தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

மேலும் படிக்க