• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி

May 15, 2018 தண்டோரா குழு

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும்,மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

104 தொகுதிகளை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் அரசு அமைக்க முடிவுசெய்துள்ளது.

சோனியா காந்தி வழங்கிய ஆதரவை – தேவகவுடா ஏற்றுக் கொண்டதால் இன்று மாலை இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
இதையடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள குழு கர்நாடக ஆளுநரை சந்திக்கிறது.

மேலும் படிக்க