• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரை ஒதுங்கிய திமிகலம் மீண்டும் கடலுக்குள் அனுப்பப்பட்டது

August 28, 2017 தண்டோரா குழு

பிரேசில் பிஸியோ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை அங்கிருந்த மக்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பினர்.

பிரேசில் தலைநகரிலிருந்து சுமார் 2௦௦ கிலோமீட்டர் தூரத்திலுள்ள பிஸியோ கடற்கரையில், சுமார் 32 அடி கொண்ட ஹம்ப் பேக்(Hump Back) இனத்தை சேர்ந்த திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதை மக்கள் கண்டனர்.

உடனே கடல் உயிரியல் நிபுணர்களுக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் தகவல் தந்தனர். தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த திமிங்கலத்தை காப்பாற்ற சுமார் 3௦௦ பேர் அங்கு கூடி, கடல் தண்ணீர் கரைக்கு வர ஒரு வழியை உருவாக்கினர். இரவு முழுவதும் அதன் அருகிலிருந்து, அதை குளுமையுடன் இருக்க அதற்கு தேவையான தண்ணீரை தர, பலர் இரவு முழுவதும் அதனுடன் இருந்தனர். அது உயிருடன் இருந்த போதிலும், அதனால் சரியாக மூச்சு விடமுடியவில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 4 டன் எடையுடைய அந்த குட்டி திமிங்கலம் தனது தாயிடமிருந்து பிரிந்து அங்கு கரை ஒதுங்கியிருக்க கூடும் என்று கடல் உயிரியல் நிபுணர்கள் தெரிவித்தனர். பல நேரம் போராட்டதிற்கு பிறகு, அதை மீண்டும் கடலுக்குள் தள்ளப்பட்டது. அது கடலுக்குள் மெல்ல நீந்தி செல்வதை கண்ட மக்கள், தங்கள் முயற்சி வெற்றியடைந்ததை கண்டு கைத்தட்டி ஆர்பரித்தனர்.

மேலும் படிக்க