• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருப்பன் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் மனு

July 13, 2020 தண்டோரா குழு

கருப்பன் யூடியூப் சேனல் மூலம் இந்து கடவுளை தவறாக பேசியுள்ள முகமது ஆசிப் கான் – ஐ கைது செய்ய கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்,

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

நகைத் தொழில் செய்பவர்கள் அதிக அளவில் கூடிய பகுதியாக உள்ளது கோவை மாவட்டம். கடந்த 10 தினங்களுக்கு முன்பாக covid-19 வைரஸ் தொற்று காரணமாக மாவட்ட ஆட்சியருடன் உத்தரவுப்படி செல்வபுரம் பகுதியில் உள்ள நகை தொழில் செய்பவர்கள் நகை கடைகளை திறக்க தடை விதித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நகை தொழில் செய்பவர்கள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டுதான் செய்துவருகின்றனர். பெரிய அளவில் கடைகள் அமைத்து தொழில் செய்பவர்களுக்கு வேண்டுமானால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இவ்வாறு வீட்டிலிருந்து தொழில் செய்பவர்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே உடனடியாக இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பரிசோதனை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆசிப் முகமது கான் என்பவர் கருப்பன் என்னும் யூடியூப் சேனல் மூலம் இந்து கடவுள்களை தொடர்ந்து விமர்சித்து கொச்சைப்படுத்தி வருகிறார். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும். மேலும் இதற்கு பின்புறமாக திமுகவினர் இருந்து அவரை ஊக்குவித்து வருகின்றனர்.

மேலும் எந்த மதம் என்றாலும் அவர் அவர்களுக்கு அவருடைய மதம் முக்கியம் எனவே யார் எந்த மதத்தை பற்றி பேசினாலும் ஒருபோதும் பாஜகவினர் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் எனவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க