• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார் – ஆர்.எஸ்.பாரதி

May 8, 2017 தண்டோரா குழு

தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது பிறந்த நாளான ஜூன் 3- ம் தேதி தொண்டர்களை சந்திக்க உள்ளார் என்று தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்கவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் உடல் நலம் தேறி வீடு திரும்பிய அவர் , கடந்த சில மாதங்களாக கட்சியினர் யாரையும் சந்திக்கவில்லை.

இந்நிலையில் வரும் ஜூன் 3- ம் தேதி அவரது 94 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. திமுக சார்பில் மிக பிரம்மாண்டமாக வைர விழாவாக விழாவினை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்த விழா சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது.
இவ்விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும், இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்த கொள்ள உள்ளதாக தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்கவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே பல மாதங்களுக்கு பிறகு கருணாநிதி விழாவில் கலந்து கொள்ள உள்ளதால் அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளார் என ஆர்.எஸ் பாரதி தகவல் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க