• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி கட்டி கொடுத்த வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டும் நபர் மீது பொதுமக்கள் புகார்

September 27, 2021 தண்டோரா குழு

கடந்த தி.மு.க.ஆட்சியில் கலைஞர் கருணாநிதி கட்டி கொடுத்த வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறிச்சி,சில்வர் ஜூப்ளியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில், சுந்தராபுரம்,குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயம் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில்,சுந்தராபுரம்,குறிச்சி பகுதியில் சில்வர் ஜூப்ளி வீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது கட்டி கொடுத்த அரசு தொகுப்பு ஒதுக்கீட்டில் கட்டிய வீடுகளை தற்போது தனி நபர் ஒருவர்,இந்த பகுதியில் குடியிருக்கும் நிலங்கள் எங்களுடையது எனவும், விரைவாக வீடுகளை இடிக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் பொக்லின் வண்டியை விட்டு வீட்டை இடித்து யாரும் புழங்காத அளவுக்கு மதில் சுவர் கட்டி விடுவோம் என்று கூறி தொடர்ச்சியாக மிரட்டுவதாகவும்,

மேலும், அரசு நில அளவை அதிகாரிகள் கிராம அதிகாரிகள், காவல் துறை சார்ந்த அதிகாரிகள். எந்த தகவலும் இல்லாமல் அடிக்கடி வந்து குடியிருக்கும் பகுதிக்கு வந்து இடையூறு செய்வதாகவும், மேலும்,நாங்கள் வசிக்கும் இடத்திற்கு உரிமை கோருபவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, வசித்து எங்கள் 16 சமுதாய குடும்பங்களுக்கு இருக்கும் இடத்திற்கு எந்த பாதிப்பில்லாமல் நாங்கள் வாழ்வதற்கு அதே இடத்தில் உதவி செய்து கொடுத்தும் எங்களுக்கு எந்த இன்னல்களும் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்க கோரியும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனு வழங்க ஆட்சியர் அலுவலகம் வந்த, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக குறிச்சி அனைத்து சமூக த்தினர் சார்பாக வடிவேல் சேர்வை சௌந்தர்ராஜ் .நா.சதிசுமள்ளர், ரமணி சேகர்,அரவான்செந்தில் என பல்வேறு சமூகத்தினர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க