• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருகிய நிலையில் பெண் சடலம் – போலீசார் விசாரணை

October 8, 2020 தண்டோரா குழு

கோவையில் கருகிய நிலையில் பெண் சடலம் கண்டுக்கப்பட்டுள்ளது.தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (50). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கார்த்திகா(43).இத்தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகா கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் தனது கணவரை தன்னுடன் இருக்க அனுமதிக்காமல் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி மருத்துவர் விஜயகுமார் மனைவியை பார்த்து விட்டு சென்றவர் மருத்துவமனையிலேயே தங்கி உள்ளார்.நேற்று கார்த்திகாவின் சகோதிரி வாசுமதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது கார்த்திகவின் அலைபேசி ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த வாசுமதி மாலை 7.30 மணியளவில் கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக தாளிடபட்டு இருப்பதை கண்ட அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையில் எரிந்த நிலையில் கார்திகாவின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்த காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தீ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க