• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கராத்தேவில் தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது – சாய் புரூஸ்

March 6, 2021 தண்டோரா குழு

கராத்தேவில் தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு கராத்தே சங்க தலைவர் சாய் புரூஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு கராத்தே சங்க தலைவர் சாய் புரூஸ் கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அகில இந்திய கராத்தே சங்கத்தலைவர் லிகி தாரா தலைமையில் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. கராத்தேவில் தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஒருவர் கராத்தே கலையை கற்பதன் மூலம் வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி சமூகத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்.கராத்தே போட்டியின் தரத்தை உயர்த்த சங்கத்தின் சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கராத்தே பயிற்சியில் மாணவர்கள் இலவசமாக சேர்ந்து பயில அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை செய்து கொடுக்க முன் வந்துள்ளோம்.போதிய நிதி வசதி இல்லாமல் தமிழகத்தில் பல கலைகள் அழிந்து வருகின்றன.பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உதவுவதாக தெரிவித்துள்ளார்.
கராத்தேயில் முறையான பயிற்சி அளித்து இதன் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க