• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? ரஜினியின் பதில்

January 17, 2018 தண்டோரா குழு

புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிப்.,21ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கவிருக்கும் கமல் தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார். ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,

புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயார். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா? என்ற நிருபர்களின் கேள்வி ஓரளவுக்கு பின்பற்றுகிறார்கள் என்று ரஜினி கூறினார்.

மேலும், கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் படிக்க