• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கனிம வள கொள்ளையை தடுக்க மனு அளித்ததால் கொலை மிரட்டல் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 19, 2019 தண்டோரா குழு

கனிம வள கொள்ளையை தடுக்க மனு அளித்ததால் செங்கல் சூளை அதிபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதாகவும் கனிம வள கொள்ளையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கபட்டு உள்ளதாக குறிப்பிடபட்டு இருந்தார்.

இது குறித்து ரங்கராஜ் கூறுகையில்,

இந்த பகுதி விவசாய நிலங்கள் எனவும் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வந்ததாக தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு செங்கல் சூளை அமைத்து தினமும் 4000 லோடு செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளவர்கள் 50 முதல் 60 அடி ஆழம் தோண்டி மண் எடுப்பதாக குற்றம் சாட்டினார்.மேலும் மண் அள்ள ரோபோகளை உபயோகிப்பதாக கூறியவர் தற்போது கிராவல் மண் மற்றும் மணல் அள்ள படுவதாக தெரிவித்தார். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் செங்கல் சூளை உரிமையாளர்கள் இயற்கை வளத்தை அழித்து கோடி கணக்கில் சம்பாதித்துள்ளனர் குற்றம் சாட்டினார்.

மேலும் பச்சை செங்கலை வேக வைக்கும் போது வெளிவரும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்டுவதாக கூறியவர் ஆழ் துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் பொதுமக்கள் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதாக தெரிவித்தார். கனிம வள கொள்ளை தொடர்பாக மனு அளித்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் இது குறித்து மனு அளித்ததால் செங்கல் சூளை உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் கணிம வள கொள்ளையில் ஈடுபடுவர்களின் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர் மாவட்ட ஆட்சியர் நேரிடையாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க