• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனிமவள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம்

February 24, 2023 தண்டாரா குழு

கனிமவள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறி கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபடுவதாகவும் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் குடிநீர் ஆதாரங்கள் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனம் ஆவது மட்டுமின்றி நில அதிர்வுகளும் மாவட்டத்தில் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

எனவே தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாக கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்தப் போவதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க