July 11, 2020
கொரொனாவால் வேலையில்லாத நிலையில் கணவரிடம் கந்து வட்டி கேட்டு தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க இருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார்.
கோவை வடவெள்ளி பகுதியைச்சேர்ந்தவர் மூர்த்தி.துப்புரவு தொழிலாளியான இவருக்கு மஞ்சு என்ற மனைவியும் மூனு மகன்களும் இருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இவர் சாய்பாபா காலனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்த போது கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வி என்பவரிடம் 60 ஆயிரம் ரூபாயை கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். கடன் வாங்கிய போது அவரது ஏடிஎம் மற்றும் வங்கி புத்தகத்தை செல்வி வாங்கி வைத்துக்கொண்டார். மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாயை என வட்டியாக செல்வி நான்கு வருடங்களாக எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொரொனா பிரச்சனை காரணமாக மூர்த்திக்கு வேலையில்லாமல் இருந்துள்ளார். வங்கியில் பணமில்லாததால் செல்விக்கு வட்டிப்பணத்தை வாங்க ரமேஷ் என்ற அடியாளை மூர்த்தியின் வீட்டுக்கு இரு நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார். வீட்டில் மூர்த்தி இல்லாததை அறிந்த ரமேஷ் அவரது மனைவி மஞ்சுவிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூர்த்தியிடம் அவரது மனைவி நடந்த சம்பவத்தை கூறியவுடன் அவர் செல்வியை வந்து இரு நாட்களுக்கு பிறகு வட்டி பணத்தை பெற்றுக்கொள்ள சொல்லியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை செல்வி , ரமேஷ் மற்றும் இரு அடியாட்களுடன் வந்து மூர்த்தியை அடித்துள்ளனர். இதனால் மூர்த்தி காலில் பயங்கர அடி ஏற்பட்டு 8 தையல் போடப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்காயத்திற்காக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவரை சாதி ரீதியாக திட்டி தாக்கிய செல்வி, ரமேஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இருப்பதாக அவரது மனைவி மஞ்சு தெரிவித்தார்.