• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“கந்துவட்டிக்காரன்: மனித உணர்வுகளையும்மனித உயிர்களையும் உறியும் ஒரு அட்டைப்பூச்சி” – இயக்குநர் சுசீந்திரன்

October 24, 2017 தண்டோரா குழு

கந்து வட்டி கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்டச் சேர்ந்த இசக்கிமுத்து, தன் குடும்பத்துடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தனர். இதில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழந்த நிலையில் இசக்கிமுத்து உயிருக்கு போராடி வருகிறார்.

இச்சம்பவம், பார்ப்போரை மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கந்துவட்டி கொடுமைக்கு எதிராக இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கந்துவட்டி ஒரு பாவச்செயல், கந்து வட்டி ஒரு பெருங்குற்றம், கந்து வட்டி ஒரு மனித நேயமற்ற செயல், கந்து வட்டி கொலைக்கு நிகரான செயல். கந்து வட்டிக்காரன் மனித உணர்வுகளையும், மனித உயிர்களையும் உறியும் அட்டைப்பூச்சி இவனைவிட மோசமானவன் அயோக்கியன் யார் என்றால் இவர்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளும் பதிவியில் இருப்பவர்களும் தான் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க