• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கந்தசஷ்டி கவசத்தை , ஆபாசமாக சித்தரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

July 14, 2020 தண்டோரா குழு

கந்தசஷ்டி கவசத்தை , ஆபாசமாக சித்தரித்து ,’ யு டியூப்பில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங்கம் சார்பாக கோவை மாவட்ட காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங்கத்தின் மாநில பொது செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் நிறுவன தலைவர் ராமநாதன் ஆகியோர் கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில்,

‘கருப்பர் கூட்டம்’ என்ற, யு டியூப் சேனலில், ஆசிப் முகமது என்பவர், கந்த சஷ்டி கவசத்தை ,ஆபாசமாக சித்தரித்து, அருவருக்கத்தக்க வகையிலும், ஹிந்துக்களின் மனம் புண்படும் படியாகவும், பதிவை வெளியிட்டுள்ளார் . தமிழகத்தில், மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற, உள்நோக்கத்தோடு பதிவிடப் பட்டுள்ளது.குறிப்பாக பிராமண சமூகத்தை வேண்டுமென்றே இழிவு படுத்தும் விதமாக பதிவிட்டுள்ள தன்னை சுரேந்தர் நடராஜ் எனும் ஆசிப் முகமது மீது இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட் பிரிவு எண் 67 உட்பட மத மோதல்களை உருவாக்கும் ரீதியில் பதிவிட்ட அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனு வழங்கும் போது ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங்கத்தின் மாவட்ட தலைவர் நாராயணன், இளைஞரணி துணை தலைவர் சதீஷ்,மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க