• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கண்காணிப்பு தின வாரத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

October 19, 2019

கண்காணிப்பு தின வாரத்தை முன்னிட்டு கோவை மண்டலம் கார்ப்பரேஷன் வங்கியின் சார்பாக மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக முழுவதும் கண்காணிப்பு தின வார விழாவை முன்னிட்டு வங்கி ஊழியர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி கார்ப்பரேஷன் வங்கி கோவை மண்டலம் சார்பாக கண்காணிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு வங்கியின் ஊழியர்களும் அலுவலர்களும் இணைந்து மனிதச் சங்கிலி மற்றும் பதாகைகள் ஏந்தியபடி நடைபயணமாக மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியானது சாய்பாபா காலனி வங்கியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலை தூரம் சென்று மீண்டும் வங்கி வரை சென்று முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வங்கியின் துணை பொது மேலாளர் விட்டல் பனசங்கரி அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மேலும் உதவி பொது மேலாளர்கள் தட்டி ஸ்ரீனிவாஸ் வாசு, ஹனுமந்த ராவ் ராஜேஷ் கண்ணா, மற்றும் முதன்மை மேலாளர் ஜெயக்குமார் வங்கி ஊழியர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க