• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவன் – மனைவி சண்டைக்கு குறுக்கே வந்த மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்

April 27, 2019 தண்டோரா குழு

மதுரை மாவட்டம், சமயநல்லூரில், குடும்ப தகராறில், மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துக்குமாரும், கவிதாவும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சில பிரச்சனை வருவது வழக்கும். அடிக்கடி சண்டை போட்டு வந்த இவர்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று கவிதா வீட்டிற்கு சென்ற முத்துக்குமார், அங்கு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் தான் முதலில் சண்டை ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் சண்டை ரொம்ப முற்றி போகவும், பிரச்சனையை தடுக்க கவிதாவின் தாயார் லட்சுமி முன்வந்துள்ளார்.இதனால்,ஆத்திரத்தில் இருந்த முத்துக்குமார், குறுக்கே வந்த லட்சுமியின் காதை, இழுத்து பிடித்து கடித்து துப்பிவிட்டார். இதில் லட்சுமி வலியால் அலறி துடித்தார். ரத்தம் பொலபொலவென கொட்ட ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமியை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாயின் காதை கடித்து துப்பியதை பார்த்த கவிதா, முத்துக்குமார் மீது போலீசில் புகார் தந்தார். புகாரின் பேரில் போலீசார் முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க