September 20, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் அன்னூர், கீரணத்தம் பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்தை சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் கட்டண கழிப்பிடம் கட்டுவதற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் கீரணத்தம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்களின் சார்பில் c.s.i. கிறிஸ்து நாதர் ஆலயம் செயல்பட்டு வருகின்றது. தங்களுக்கு
சொந்தமான இந்த இடத்தில், தேவாலயத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்காகவும், கழிப்பிடம் கட்டுவதற்காகவும் ஊராட்சி மூலமாக உரிய அனுமதி பெற்று கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணி 70 விழுக்காடு முடிவடைந்த நிலையில், ஒரு சில இந்து அமைப்பினர் இந்த பணியை தடுத்து நிறுத்த முற்பட்டு வருகின்றனர் என்றனர்.
இந்து அமைப்பினர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட, கருத்து வேறுபாடுகள் காரணமாக காவல்துறையினர் சட்ட ஒழுங்கை காக்கும் நோக்கில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தி உள்ளனர். சுற்றுச்சுவர் கட்டப்படும் இடம் பட்டா இடம், எனவும், பில்டிங் அப்புவலை முறையாக பெற்று அனைத்து ஆவணங்களையும் காவல்துறை வசமும், வருவாய் அதிகாரிகளிடமும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த ஆவணங்களின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகளை முழுமையாக நிறைவு பெற்று தேவாலயத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு ஏற்றார்போல் சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி,திராவிட இயக்கங்கள், மற்றும் கீரணத்தம் ஆதிதிராவிட மக்கள் ஒன்றிணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.