• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சி தொடங்க மக்களிடம் பணம் கேட்பதா ? கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

November 7, 2017 தண்டோரா குழு

அரசியல் கட்சி தொடங்க மக்களிடம் பணம் கேட்பதா? என நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை முலக்கொத்தளத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, யார் வேண்டுமானாலும் அரசியலில் நிற்கலாம். ஆனால், அதை முடிவு செய்யும் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் கட்சி தொடங்க தொண்டர்களிடம் கொடை கேட்டவர் கமலஹாசன் என குறிப்பிட்டார்.

மேலும், எந்த அடிப்படையில் ரூ.30 கோடி தொண்டர்களிடம் இருந்து வசூலிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தனக்கு புரியவில்லை என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் தொண்டர்களிடம் பணம் கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க