மும்பையில் வாங்கிய கடனை திருப்பி தருவதற்காக, தன்னுடைய குழந்தையை விற்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்தவர் முன்னா ஷேக்(38) மற்றும் அவருடைய மனைவி ஷாசியா(35). ஷாஷியாவிற்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டது. இது குறித்து கணவன் மனைவி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, முதலில் அந்த குழந்தையின் பெற்றோரை அவர்கள் விசாரித்தனர். அந்த விசாரணையின் போது, அந்த குழந்தையின் தந்தை முன்னுக்கு முரணாக பதிலளிப்பதை கண்ட காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவரை தீவிரமாக விசாரித்தனர். தான் வாங்கிய 1 லட்சம் கடனை திருப்பி தருவதற்காக, தன்னுடைய ஆண் குழந்தையை 2௦,௦௦௦ ரூபாய்க்கு ஜூலியா பெர்னான்டெஸ் என்பரிடம் விற்றதாக தெரிவித்தார்.
இதனையடுத்து ஜூலியா பெர்னான்டெசை குழந்தை கடத்தல் குற்றத்தின் கீழ் கைது செய்து, அந்த குழந்தையை பத்திரமாக காவல்துறையினர் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஷேக்கிடம் இருந்து அவருடைய ஆண் குழந்தையை வாங்கியதையும், குழந்தை இல்லாத தம்பதியினரிடம் அந்த குழந்தையை 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிட்டு இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, முன்னா ஷேக் மற்றும் ஜூலியா பெர்னாண்டஸ் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது