• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள் – மோடி

February 7, 2019 தண்டோரா குழு

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதிலுரை அளித்ததார்.

அப்போது பேசிய அவர்,

எங்கள் ஆட்சி நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழைகளுக்காகவே நான் வாழ்கிறேன் அதற்காகவே நான் இங்கு நின்றுள்ளளேன். பல்வேறு சாதனைகளையும் பாஜக கூட்டணி அரசு செய்துள்ளது. வாகன உற்பத்தியில் இந்தியா 4-வது இடத்திலும், மொபைல் போன் உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கிறது. இரும்பு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பாஜக வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது. 55 மாதங்களில் 13 கோடி எரிவாயு இணைப்புகளை அரசு வழங்கி உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன வாகன உற்பத்தியில் உலகின் 4 வது பெரியநாடு இந்தியா; மொபைல் போன் உற்பத்தியில் 2 வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது. 2 சகாப்தம் முடிந்துள்ளது ஒன்று காங்கிரசுக்கு முன் ( BC ) , வாரிசு அரசியலுக்குப்பின்(AD) நான் சொன்ன மாற்றங்கள் நடந்துள்ளது. நான் எப்போதும் உண்மையைத்தான் பேசுகிறேன். என்னை பலரும் பலவிதமாக விமர்சிக்கின்றனர். என்னை விமர்சியுங்கள், நாட்டை விமர்சிக்க வேண்டாம். விமர்சனம் என்ற பெயரில் குறைகூறுவது தவறானது. இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது. தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறது. மாநில ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவு 100 முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமை தாங்குவதன் மூலம் இந்தியாவின் நற்பெயருக்கு காங்கிரஸ் களங்கம் ஏற்படுத்துகிறது. அரசியல் லாபத்திற்குகாக கற்பனை கதையை காங்கிரஸ் அவிழ்த்து விடுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்டு வருகிறோம்.சவால்களை எதிர்கொள்வோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் படிக்க