• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு ரயில் குற்றங்கள் குறைந்துள்ளது – ஐ.ஜி பிரேந்தரகுமார்

December 30, 2019

இந்தாண்டு இந்தியாவிலேயே பாலக்காடு ரயில் நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள், ஹவாலா பணம் என கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த பறிமுதல் மதிப்பில் இது 60 சதவீதமாகும் என தென்னக இரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்தரகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை இரயில் நிலையத்தில் தென்னக இரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்தரகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் ரெயில்வே காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்குபெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,

கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக, இன்னும் இரு தினங்களில் புத்தாண்டு வருவதை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என்பதால், சிசிடிவி உள்ளிட்ட ரயில் நிலையங்களின் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்தாண்டு சுமார் 374 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 95 முறை தவற விடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டவர், சேலம் கோட்டத்தில் 335 ஊழியர்களில் கோவை ரயில் நிலையத்தில் மட்டும் 60 ரயில்வே பாதுகாப்பு படையினர் பணி புரிந்து வருவதாகவும், கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு ரயில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரயில்கள் மீது கற்கள் எரிவது அதிகரித்ததை அடுத்து, சில இடங்கள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ரயிலிலே ரயில்வே பாதுகாப்பு படையினர் இருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருவதுடன், பெண் பயணிகளுக்கென்று புதிதாக 20 பெண் உதவி ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாகவும், அவர்கள் 6 மாத பயிற்சிக்கு பின் பணியில் சேரவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க