• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை

February 15, 2017 தண்டோரா குழு

லிபியாவில் இருந்து பல்வேறு காரணத்திற்காக கடத்தப்பட்ட 13 எகிப்தியர்களை விடுதலை செய்ததாக அந்நாடு அறிவித்துள்ளது.

2௦11ம் ஆண்டு முதல் பல்வேறு குழப்பம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை நிறைந்த பகுதியான கிழக்கு லிபியாவிற்கு 13 எகிப்தியர்கள் கடத்தப்பட்டனர். புதன்கிழமை(பிப்ரவரி 15) விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று எகிப்து ராணுவம் அறிவித்துள்ளது.

எகிப்து ராணுவத்தின் செய்திதொடர்பாளர் கர்ணல் தமர்-அல்-ரிபாய் கூறுகையில், “வடகிழக்கு லிபியாவின் அஜ்டபியா பகுதியை சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல் 13 எகிப்தியரை கடத்தியது” என்றார்.

எகிப்து ராணுவ அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “லிபியாவின் ராணுவ ஜெனரலுடன் ஒருங்கிணந்து செயல்பட்டதால் அவர்களுடைய விடுதலை சாத்தியமானது” என்று கூறியுள்ளது.

2௦11ல் நடந்த புரட்சியில் நீண்ட நாள் சர்வாதிகாரியாக இருந்த மோமர் கடாஃபி போராளிகளின் உதவியுடன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதன் பிறகு லிபியா பல அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளில் சிக்கி தவித்தது.

2௦15ம் ஆண்டு ஐஎஸ் குழு எகிப்தை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களின் தலை வெட்டப்படும் காணொளியை வெளியிட்டது. இந்த அட்டூழியத்திற்கு பதிலடி தர ஐஎஸ் குழு இருந்த பகுதிகளில் விமானத் தாக்குதல்களை எகிப்து நடத்தியது. இதையடுத்து லிபியாவிற்கு புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான எகிப்து மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க