• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் : 4 பேர் கைது

April 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த மெய்யரசன் (26), அதே பகுதியை சேர்ந்த புவனேஷ் (26), கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பரத் (32) மற்றும் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த லலித்குமார் (26) ஆகிய 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.050 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, ரூ.30,000- மதிப்புள்ள 3.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க