• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் பாதிப்பால் பூக்களின் வரத்து குறைவு – விலை உயர்வு

January 14, 2019 தண்டோரா குழு

கஜா புயல் பாதிப்பு மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகை மற்றும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ விலை நிலவரம் குறித்து கீழே பார்ப்போம்.

ஜாதி மல்லி ஒரு கிலோ ரூ.1500, (மற்ற நாட்களில் கிலோ ரூ.600க்கு விற்பனையாகும்) காட்டு மல்லி (காக்கரட்டான்) ஒரு கிலோ ரூ.800 (மற்ற நாட்களில் கிலோ ரூ300) செவ்வந்திப்பூ ஒரு கிலோ ரூ.150 (மற்ற நாட்களில் கிலோ ரூ.80) ரோஜாப்பூ ஒரு கிலோ ரூ.260 (மற்ற நாட்களில் கிலோ ரூ.120) கனகாம்பரம் பூ ரூ.1200 (மற்ற நாட்களில் கிலோ ரூ.600) அரளிப்பூ ஒரு கிலோ ரூ.300 (மற்ற நாட்களில் கிலோ ரூ.150) விச்சு பூ ஒரு கிலோ ரூ.120 (மற்ற நாட்களில் கிலோ ரூ.60)
கோழி கொண்டை பூ கிலோ ரூ. 80 (மற்ற நாட்களில் கிலோ ரூ.40)
மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.20

கடந்த மூன்று நாட்களாக இதே விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலையுயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க