• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித் நிதியுதவி !

November 24, 2018 தண்டோரா குழு

கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கஜா புயலின் கோரதாண்டவத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பட்ட மக்களும் உதவி வருகின்றனர். அதைப்போல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ் திரையுலகினரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்ச ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளனர்.

நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.4.50 லட்சம் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்., இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில், தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க