• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா நிவாரணம் குறித்த தகவலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

January 29, 2019 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது என்ற பட்டியலை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கின, மேலும் மீனவர்களும் இதில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், யாருக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற விரபங்களை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், தாசில்தார் அலுவகம் போன்ற இடங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பான விபர பட்டியலை, பிப்ravarரவரி 12-இல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க