• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பி.எஸ்., – சசி அணி இணையும் வாய்ப்பு குறைந்தது

April 18, 2017 தண்டோரா குழு

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தான் இருக்க வேண்டும். துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தான் இருக்க வேண்டும் என அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஒ.பி.எஸ் அணி சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்ற இரு அணிகளும் சமரசம் செய்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட இரு அணிகளும் இணைந்து விடும் என்ற நிலையில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏ வெற்றிவேல்,

அமைச்சராக இருந்தால் இரண்டு கொம்பு முளைத்து விடுமா? 30 பேர் கலந்து கொண்டால் கேபினட் மீட்டிங் வேண்டுமானல் நடத்த முடியும். கட்சி தொடர்பாக எப்படி விவாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.இரண்டு அணியும் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு குறித்த தகவலையும் வெற்றிவேல் மறுத்தார்.ஓபிஎஸ் பேட்டியை பார்த்தேன். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது தெரிகிறது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. நீதி விசாரணை நடத்துவேன் என கூறுகிறார்.இது அனைத்து அதிமுக தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

யாரோ நான்கு பேர் வாழ்வதற்காக ஜெயலலிதா காப்பாற்றிய கட்சியை நடுரோட்டில் நிற்க வைத்து சந்தி சிரிக்க வைக்கிறார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள தவறுகளை மறைக்க யாரிடமோ மண்டியிடுகிறார்கள். எங்களுக்கு மடியில் கணம் கிடையாது. எனவே யாரிடமும் நாங்கள் மண்டியிடப் போவதும் கிடையாது என்று கூறினார்.

மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தான் இருக்க வேண்டும். துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தான் இருக்க வேண்டும். அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றில்லை. தொண்டர்கள் கூட அனைத்தையும் பேச உரிமை உண்டு. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பொறுப்பை கேட்கிறார். பொதுப்பணித்துறை உள்ளிட்ட 6 அமைச்சர் பதவியை கொடுத்தால் நிபந்தனையற்று இணைவதாக கூறுகிறார் என்று வெற்றிவேல் தெரிவித்தார்.

மேலும்,டிடிவி தினகரன் மீதான வழக்குகள் குறித்து கேட்டபோது, வழக்குகளை தினகரன் சட்டரீதியாக சந்திப்பார். கட்சி அவருக்கு துணை நிற்கும் என்றார்.இதற்கிடையில், சசிகலா குடும்பம் இருக்கும் வரை இரு அணிகளும் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.நேற்றைய தினம் இரு அணிகளும் இணையும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓ.பி.எஸ்.- சசி அணி இணையும் வாய்ப்பு குறைந்தது.

மேலும் படிக்க