• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல், கிருஷ்ணகிரி எம்.பிக்கள் ஆதரவு

February 11, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க.வின் ஆர். சுந்தரம் (நாமக்கல்), மற்றும் அசோக்குமார் (கிருஷ்ணகிரி) மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சனிக்கிழமை நேரில் வந்து இருவரும் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். இதன் மூலம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு எம்.பி.க்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி க்கள் என பலரும் தங்களது ஆதரவை அவருக்கு அளித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. எனினும் உறுதியாக நல்லதே நடக்கும் என்று தனது இல்லத்தில் உள்ள ஆதரவாளர்களிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாநிலங்களவை அதிமுக எம்.பி மைத்ரேயன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க