• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியாவை கைது செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

March 4, 2019 தண்டோரா குழு

‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 90 எம்.எல். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ள இப்படத்திற்கு ’A’ சான்றிதழ் வழங்கபட்டது. இப்படத்தின் டிரைலர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கிடையில் படத்தை பார்த்தும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் பெண்கள் அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவ்வமைப்பின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஆரிபா ரசாக்,

இப்படம் குழந்தைகளை சீரழிக்கும் படமாகவும் ”பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளனர். ஆகையால் கலாச்சார சீரழிவுக்கு காரணமான 90 எம்.எல் திரைப்படத்தை உடனே தடைசெய்ய செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மற்றும் இயக்குநர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திரைப்படங்களை எடுத்து திரையிட மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க