September 25, 2017
தண்டோரா குழு
ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் அவர் வெற்றியும் பெற்றார். எனினும் அப்போது பிரிந்து இருந்த ஓபிஎஸ் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்கள் வாக்களித்திருந்தனர். எனவே கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை தேவை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக வரும் புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.