• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓடுபாதையில் விமானத்தின் குறுக்கே வந்த குட்டி விமானம்: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி

March 7, 2016 nadunadapu.com

பிரான்ஸ் நாட்டில் தரையிறங்க முயற்சித்த பயணிகள் விமானத்திற்கு எதிரே திடீரென சிறிய ரக விமானம் வந்ததை தொடர்ந்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி ஒரு பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.

ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் இருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் A320 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது.

பாரீஸில் உள்ள Charles de Gaulle என்ற விமான நிலையத்தை நோக்கி வந்த விமானம், ஓடுபாதைக்கு மேலே பறந்து தரையிறங்க முயற்சித்துள்ளது.

சுமார் 1,500 மீற்றர் உயரத்தில் விமானம் வந்துக்கொண்டு இருந்தபோது, திடீரென ‘ட்ரோன்’ எனப்படும் சிறிய ரக விமானம் வந்ததை கண்டு விமானி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட்ட அந்த விமானி, உடனடியாக விமானத்தின் போக்கை மாற்றி தானாக இயங்கும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போது, விமானத்தின் இடது இறக்கைக்கு சுமார் 5 மீற்றர் இடைவெளியில் அந்த குட்டி விமானம் மீது மோதாமல் சாமர்த்தியமாக தரையிறங்கியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 19ம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை அன்று தான் விசாரணை அதிகாரிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பொதுவாக, இதுபோன்ற சிறிய ‘ட்ரோன்’ விமானங்கள் மீது பயணிகள் விமானம் மோதினால், எந்த விபத்தும் ஏற்படாது. ஆனால், பயணிகள் விமானத்தின் இறக்கைகளில் உள்ள என்ஜின்களுக்கு நுழைந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு விடும்.

விமான நிலையத்திற்கு அருகே 150 மீற்றர்களுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, அந்த குட்டி விமானம் சுமார் 1,500 மீற்றர் உயரத்தில் பறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ட்ரோன் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க