• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு இந்தியாவில் பேட்மிட்டன் போட்டி பிரபலமாகி உள்ளது

October 5, 2017 தண்டோரா குழு

ஒலிம்பில் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு பேட்மிட்டன் போட்டியும் பிரபலமாகி உள்ளதாக பேட்மிட்டன் வீராங்கனை பி வி சிந்து கூறியுள்ளார்.

கோவையில் தனியார் நிறுவன ஸ்போர்ட்ஸ் அகாடமியை பேட்மிட்டன் வீராங்கனை பி வி சிந்து திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பயிற்சியாளர் கோபிசந்தின் அகாடமியில் சேர்ந்தால் மட்டும் சாம்பியன் ஆக முடியாது கடின உழைப்பு இருந்தால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை பெற முடியும்.நல்ல பயிற்சியாளர் கிடைத்ததால் தான், பேட்மிட்டன் விளையாட்டில் தான் வெற்றி பெறு முடிந்தது.கடின உழைப்பும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றார்.

மேலும் தன்னை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்பு அதிக அளவில்கி ரிக்கெட் போட்டி மட்டுமே பிரபலமாகி இருந்ததாகவும் , ஆனால் தற்போது ஒலிம்பில் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு பேட்மிட்டன் போட்டியும் பிரபலமாகி உள்ளதாகவும் இந்த விளையாட்டில் சேர பலரும் ஆர்வம் காட்டி வருவதாக கூறினார்.

மேலும் படிக்க