• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே வாக்காளர்! ஒரே வாக்குசாவடி! – 100 சதவீத வாக்குப்பதிவு !

April 23, 2019 தண்டோரா குழு

2019ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தல் ஆணையமும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது. அந்த அடர்ந்த காட்டுக்குள் “பனெஜ்” என்ற இடத்தில் மிகப்பழமையான சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் 60 வயதை கடந்த “தர்ஷன்தாஸ்” என்பவர் பூசாரியாக உள்ளார். கோவில் வளாகத்தில் தங்கி இருக்கும் அவர் அந்த முகவரியில் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் எடுத்து வைத்துள்ளார். அவர் வசிக்கும் பகுதி அடர்ந்த காட்டுக்குள் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இதனால் அந்த காட்டுக்குள் இருக்கும் ஒரே ஒரு வேட்பாளராக தர்ஷன்தாஸ் உள்ளார். தேர்தல் கமிஷன் விதிப் படி ஒரு வாக்காளர் தன் வாக்கை பதிவு செய்ய 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.
இந்நிலையில், அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த வாக்குச்சாவடி கிடைத்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு,

’ஒரு ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.

கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் தர்ஷன்தாஸ் வாக்கை பெற அதிகாரிகள் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க