• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு வாரம் தாடியை ஷேவ் செய்யாமல் குளிக்காமல் இருந்த கணவர் – விவாகரத்து கேட்ட மனைவி

April 13, 2019 தண்டோரா குழு

கணவர் கிட்டத்தட்ட 1 வார காலமாக குளிக்காமல் இருந்ததால் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் போபாலில் அரங்கேறியுள்ளது.

திருமணம் ஆனா சில மாதங்களில் கணவன் – மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கம். அப்போது மனைவி கோபித்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுவார். இதிலும் சில சண்டைகள் பெரிய அளவில் சென்று விவாகரத்து வரை சென்று விடும். விவாகரத்து வரை செல்லும் அளவிற்கு பிரச்சினை என்றால் ஏதாவது முக்கியமான காரணம் இருக்கவேண்டும். ஆனால், மத்திய பிரதேசத்தில் கணவர் கிட்டத்தட்ட 1 வார காலமாக குளிக்காமல் இருந்ததால் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் போபாலில் அரங்கேறியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு இருவீட்டார் சம்மந்ததுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி ஒரு ஆண்டாகியும் தற்போது வரை குழந்தைகள் இல்லை. இதற்கிடையில், தன் கணவர் 1 வார காலத்திற்கும் மேலாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும், ஒரு வாரத்திற்கும் மேலாக குளிக்காமல் இருப்பதாகவும் மனைவி விவாகரத்து கோரி மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்பெண்ணின் வீட்டார், கணவரை விட்டு பிரியாதே என எவ்வளவோ எடுத்துக்கூறியும் அப்பெண் அதனை கேட்காமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு 6 மாத காலத்திற்கு கணவன்- மனைவியை பிரிந்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், அதன்பின் விவாகரத்து வழங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும், அண்மையில் சின்னச்சின்ன காரணங்களுக்காக கூட தம்பதியினர் புரிதல் இல்லாமல் விவாகரத்து கேட்பதாக நீதிமன்ற ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க