• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு ரூபாய் இட்லி அம்மாவுக்கு உதவிய பாரதியார் பல்கலைக்கழகம்

April 25, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பாரதியார் பல்கலைக்கழகம்
உதவி புரிந்தது.

கோவை ஆலந்துரையை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். தனது சுயநலமில்லாத சேவையால் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.ஆம்! ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று ஒரு ரூபாய் இட்லி பாட்டி என சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.இவர் தற்போது ஊரடங்கு உத்தரவினால் வியாபாரம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து,பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ‌டாக்டர்.பி.காளிராஜின் வழிகாட்டுதலின்படி பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மற்றும் அலுவலர்கள் உணவு, மளிகை பொருட்களை ஏற்பாடு செய்து ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு மளிகை பொருட்களும் ரூபாய் ஐந்தாயரத்தையும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கா.முருகன் ஆட்சிக்குழு உறுப்பினர் ரூபா குணசீலன், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க