• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு கி.மீ., நீளத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவர்கள்

May 3, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைக் கோரி பிரதமர் மோடிக்கு 1 கி.மீ., நீளத்தில் உத்தரப்பிரதேச மாநில பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி பகுதியில் நேற்று முன்தினம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது,பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பரம்ஜீத் சிங் என்ற வீரரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்ற வீரரும் வீரமரணம் அடைந்தனர்.இதுமட்டுமின்றி வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் உடல் உறுப்புகளை துண்டித்து, அவர்களது உடல்களையும் சிதைத்துள்ளனர்.இச்சம்பவத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள பள்ளி மாணவர்கள்,அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு 1 கி.மீ., நீளம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வீரர்கள் தாக்கப்பட்டதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், இந்த கடிதத்தை,மாணவர்கள் பிரதமர் மோடிக்கு விரைவில் அனுப்பவுள்ளனர்.

மேலும் படிக்க