• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.நா.வின் அமைதியின் தூதராக மலாலா யூசுப் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்

April 8, 2017 தண்டோரா குழு

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ராஸ் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்பை ஐ.நா.வின் அமைதியின் தூதராக தேர்ந்தெடுத்துத்துள்ளார்.

1997ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்த மலாலா, வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்ஹவா என்னும் இடத்திலுள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று தலிபான் உத்தரவிடிருந்தது. அதையும் மீறி பள்ளிக்கு சென்ற பெண்களை கடுமையாக தண்டித்தனர்.

அந்த சூழ்நிலையில், பெண்களுக்கு கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்று போராடி வந்தார். அவருடைய போராட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தது தலிபான் அமைப்பு. இதையடுத்து, 2௦12ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி மதிய நேரத்தில் ஒரு தலிபான் அவரை துப்பாக்கியால் சுட்டான்.

ஆபத்தான நிலையில் ராவல்பிண்டி இதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து சிகிச்சைக்காக இங்கிலாந்தின் பிர்மிங்ம்ஹாம் நகரிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் மலாலாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து ஆதரவு வந்தது.

இதனையடுத்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வந்த பிறகும், தனது போரரட்டத்தை தொடர்ந்தார். அவருடைய நல்முயற்சிக்கு நோபல் பரிசு பெற்ற இளம் வயது பெண் என்ற பெருமை அவரையே சேரும்.

“மிகவும் ஆபத்தான நிலையிலும், சிறிதும் அஞ்சாமல் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தும், நிகரில்லாத அர்பணிப்பும் கொண்டவராக இருக்கிறார் மலாலா” என்று ஐ.நாவின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஹாலிவுட் நடிகர் மைகேல் டக்லாஸ், லியோனார்டோ டி காப்ரியோ, வன விலங்குகள் நிபுணர் ஜேன் குட்ஆல் மற்றும் இசை கலைஞர்கள் டேனியல் பாரேன்போயிம் மற்றும் யோ யோ மா ஆகியோரும் அமைதியின் தூதர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க