October 30, 2017
தண்டோராகுழு
சென்னையில் ஐ.ஏ.எஸ் தேர்வில் புளூடூத் மூலம் காப்பியடித்த அடித்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான மெயின் தேர்வு நடந்தது. இதில், நாங்குநேரி உதவி எஸ்.பி., சபீர் கரீம் என்பவர்,பங்கேற்று தேர்வு எழுதினார். அப்போது,சபீர் கரீம்வசூல்ராஜா பட பாணியில் புளூடூத் மூலம் அவரது மனைவியிடம் பேசியபடி காப்பி அடித்து எழுதியது தெரியவந்தது.
இதையடுத்து, எழும்பூர் போலீசார் சபீரை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த அவரது மனைவியிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரியான இவர், ஐஏஎஸ் பதவிக்காக தேர்வு எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.