• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : திஹார் சிறைக்கு செல்கிறார் ப. சிதம்பரம்

September 5, 2019 தண்டோரா குழு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை 19ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது, அவர், சிபிஐ கஸ்டடியில் உள்ளார். 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்பவில்லை.

இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இதனால், அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரிக்க தடை இல்லை. அமலாக்கத்துறை கைது செய்தால், திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதால், அமலாக்கத்துறை முன்னால் சரணடைய தயார் என்று சிதம்பரம் தரப்பினர் சிபிஐ நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி, வரும் 19ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், திஹார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க