• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து !

December 11, 2018 தண்டோரா குழு

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி அதிக இடங்களை பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மிசோரமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலதலைவர் திருநாவுக்கரசு:

இந்த வெற்றி வரக்கூடிய தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கிறது. மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் தலைவர் ராகுல் காந்திக்கும் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். மிகுந்த மகிழ்ச்சியைதருகிறது. தனது தொடர் சுற்றுப்பயணத்தாலும், கடினஉழைப்பாலும்வெற்றிபெற்றிருக்கிறார். மக்கள் பிஜேபியை தோல்வியடைய செய்துள்ளனர். குறிப்பாக பிஜேபியின் கருவூலமாக திகழக்கூடிய ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களிலேயே தோல்வியடைந்திருப்பது, பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் மோடிக்கு மாற்று தலைவர்ராகுல் காந்திதான்” என கூறினார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:

முழுவெற்றியும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சாரும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், ஆணவமிக்க பாஜக தலைவர்களுக்கு சிறந்தபாடத்தை மக்கள் தந்துள்ளதாகவும், தேர்தல் வெற்றிக்குபாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி):

5 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்காக எச்சரிக்கை மணி. மேலும் வாக்களித்த 5 மாநில மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சச்சின்பைலட் (காங்கிரஸ்):

எங்களின் வெற்றிராகுல் காந்திக்கான பரிசு. இன்றிலிருந்து சரியாக ஒருவருடத்திற்கு முன்பு தான் காங்கிரஸ் தலைவரானார் ராகுல். பாஜகவை மககள் புறக்கணித்துவிட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மம்தாபானர்ஜி:

அரையிறுதி போட்டியிலேயே எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. காணாமல் போய்விட்டது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாவட்டங்களுக்கான சட்டசபைதேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த 5 மாநிலதேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்த பாஜக, அங்கும் மீண்டும் ஆட்சியைத்தக்கவைக்க முடியாத சூழல்நிலவுகிறது.
இந்த அரையிறுதிபோட்டியிலேயே எல்லாமாநிலங்களிலும்பா.ஜ.க. காணாமல் போய்விட்டது. இறுதிப்போட்டியான 2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்றதேர்தல் முடிவுகள் எப்படி அமையும் ? என்பதற்கான உண்மையான ஜனநாயககுறியீடாக இந்த முடிவுகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஜனநாயகத்தில் மக்கள்தான் எப்போதுமே ஆட்டநாயகர்கள். வெற்றிபெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன், எனதெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க