• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐந்து மனைவிகளை அடமானம் வைத்த சவூதி இளவரசர்

June 8, 2017 தண்டோரா குழு

சூதாட்டத்தில் தோற்ற இளவரசர் பணத்திற்கு பதிலாக தனது 5 மனைவிகளை அடமானம் வைத்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் இளவரசர் மஜீத் பின் அப்துல்லா போதை பொருள் மற்றும் சூதாட்டத்தில் புகழ் பெற்றவர். சில நாட்களுக்கு முன் எகிப்து நாட்டிற்கு சென்ற அவர், சினாய் கிராண்ட் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

சுமார் ஆறு மணி நேரம் விளையாடிய இந்த ஆட்டத்தின் இறுதியில் 359 மில்லியன் ரூபாயை இழந்துள்ளார். இதன் விளைவாக தன்னிடம் இருந்த அனைத்தையும் தந்து தோற்றதற்காக பணத்தை கட்டியுள்ளார். ஆனால், மீதி 25 மில்லியன் கட்டவேண்டியிருந்தது. அந்த பணத்தை எப்படி கட்டுவது என்று கலங்கியுள்ளார். பணத்திற்கு பதிலாக அவருடைய 5 மனைவிகளை அடமானம் வைத்துவிட்டார்.

கேசினோவின் இயக்குனர் அல் ஷாமூன் கூறுகையில்,

“25 மில்லியன் பணத்திற்கு பதிலாக அவருடைய 5 மனைவிகளை அடமானமாக வைத்துவிட்டு சென்றுவிட்டார். பெண்களை விற்பனை செய்வது பல மத்திய கிழக்கு நாடுகளில் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது.

இளவரசரின் மனைவிகளுக்கு என்ன நடக்கும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அடுத்த சில வாரங்களுக்குள் சவூதி அரச குடும்பத்தினர் அவர்களை மீண்டும் திரும்ப வாங்கிக்கொள்ள முடியும். இல்லையென்றால், இன்னும் சில மாதங்களில் ஏமன் அல்லது கத்தார் நாட்டில் நடைபெறும் ஏலத்தில் விற்கப்படுவார்கள்” என்று கூறினார்.

எகிப்து வெளியுறவு துறை அமைச்சர் சமே ஷுக்கரி கூறுகையில்,

“அவர்களுடைய கணவரின் கடனை திரும்ப செலுத்திய பிறகு, அவர்களை மீண்டும் தங்கள் தாயகமான சவூதி அரேபியாவிற்கு திரும்ப என்னுடைய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என்று கூறினார்.

மேலும் படிக்க