• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல்

March 9, 2018 தண்டோரா குழு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் அழித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார்கைது செய்தனர். பின்னர் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. பின்னர், அதனை  மேலும் 3 நாட்களுக்கு நீடித்தது.

இந்நிலையில், இன்று கார்த்திக் சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே 9 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு சி.பி.ஐ காவலை நீட்டித்தது பாட்டியாலா நீதிமன்றம்.

மேலும் படிக்க