• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது -அமைச்சர் எஸ்.பி வேலுமணி

July 28, 2020 தண்டோரா குழு

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதற்கிடையில்,சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து,ரஹ்மானுக்கு ஆதரவாக பலரும் டுவீட் செய்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் இந்தி திரையுலகினரை சாடி வருகின்றனர்.இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்,

பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க