May 15, 2020
தண்டோரா குழு
மதுபானக் கடைகளைத் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில்,தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக,உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.அந்த வழக்கில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து,டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு இருந்த சட்ட தடைகள் விலகின.
இந்த நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்,சிவப்பு மண்டலங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படும்.மது வாங்க வருபவர்களுக்கு வாகனங்களை நிறுவத்துவதற்கு உரிய இடம் வழங்கவேண்டும்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், 7 வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கவும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.