• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 1ம் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்

March 29, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராடி வரும் மக்களுடன் இணைந்து வரும் 1ஆம் தேதி போராட்டத்தில் ஈடுப  உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் அழைத்தால் கலந்து கொள்வேன் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார்

இந்நிலையில், இன்று நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,  

“ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த போராட்டம் தொடர்பாக எனக்கு அழைப்பு வரும் என ஏற்கனவே தெரியும். நேற்று எனக்கு அப்பகுதி  மக்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி தூத்துக்குடி சென்று போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க