• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏசி அறையில் உத்தர பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் கோவாவிற்கு தப்பிச் சென்ற பசு!

June 10, 2017 தண்டோரா குழு

உத்தர பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் கோவா தப்பிச் சென்ற பசு ஒன்று அதன் உரிமையாளருடன் மீண்டும் செல்ல மறுக்கும் சம்பவம் ஆச்சரியத்தை பெரும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் பசு ஒன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. இதையடுத்து, அவர் பசு காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், உபி.யில் காணாமல் போன பசு கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையில் இருப்பதை வாட்ஸ்ஆப்மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, பசுவின் உரிமையாளர் அதனை அழைத்துவர கோவா சென்றுள்ளார்.

எனினும், உபியில் இருந்து எப்படி இந்த பசு கோவாவிற்கு வந்தது என போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது,லக்னோவில் இருந்து ரயில் மூலம் பசு கோவா வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், ஏசி அறையில் பசுபயணம் செய்ததை டிக்கெட் பரிசோதகர் கவனித்துள்ளார். ஆனால், எங்கே பசுவை கீழே இறக்கவிட்டால், பசு பாதுகாப்பு படையினர் மூலம் தனக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என எண்ணிய அவர், பசுவைதொந்தரவு செய்யாமல் விட்டுள்ளார்.

இந்நிலையில், பசுவை தன்னுடன் உபி.க்கு அழைத்து செல்ல கோவா சென்ற விவசாயி பசுவை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார்.ஆனால் பசுவோ அவருடன் செல்ல மறுத்து முரண்டு பிடித்து வருகிறது. எனினும் அவர் பசுவை வலுக்கட்டாயமாக இழுத்துள்ளார். அது அந்த இடத்தை விட்டு நகராமல் விடாப்பிடியாக அங்கேயே அமர்ந்துவிட்டது. இதனால் பசுவின் உரிமையாளரான அந்த விவசாயி செய்வதறியாமல் திகைத்து வருகிறார்.

மேலும் படிக்க