• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.வேலுமணியை நீக்கியதற்கு கண்டனம்– கோவையில் தினகரன் உருவபொம்மை எரிப்பு

August 28, 2017 தண்டோரா குழு

கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் தினகரன் உருவபொம்மையை எரித்தனர்.

கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகுமார் நியமிக்கப்படுவதாகவும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.மேலும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நீக்கப்பட்டுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் கோவை குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினகரன் கொடும்பாவி எரித்தனர்.

மேலும், சசிகலா, தினகரனுக்கு எதிராக கோஷமிட்ட அக்கட்சியினர் பல்வேறு இடங்களிலும் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க