September 26, 2020
தண்டோரா குழு
பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எஸ்.பி.பி கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் பெற்ற நிலையில்,நேற்று சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி. மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இன்று அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய்
அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் எஸ்.பி.பியின் மகன் சரனுக்கு ஆறுதல் கூறினார்.