September 26, 2020
தண்டோரா குழு
இந்திய இசை உலகின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நடலகுறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“#SPB – பன்முகத்தன்மை கொண்ட தன் மெல்லிசை குரலால் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த வித்தகர். மக்கள் கொண்டாடிய செழுமையான கலைஞர். அவரது கலைக்காக நேசிக்கப்பட்டதை போல பணிவிற்கும் எளிமைக்கும் கொண்டாடப்பட்டவர். அவரது குடும்பத்தினர் நண்பர்கள் ரசிகர்களுக்கு நமது இரங்கல்கள்” என கூறியுள்ளார்.