• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.டி.பி.ஐ.கட்சியின்13 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

June 21, 2021 தண்டோரா குழு

எஸ்.டி.பி.ஐ.கட்சியின்13 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ.கட்சி துவங்கி இன்று 13 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.இதனை தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில், கோவையில் கோட்டை மேடு தலைமை அலுவலகம், செல்வபுரம், குணியமுத்தூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பகுதிகளில்கட்சி கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

இதனை தொடர்ந்து,கோவை அரசு மருத்துவமனையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரத்ததானம் செய்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியும், மருத்துவ பணியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.இதே போல நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக, போத்தனூர்,கோவை பதூர் அன்பு இல்லம் ஆகிய பகுதிகளில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு போர்வைகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

பின்னர்,பொதுமக்களுக்கு முககவசம் வழங்குதல் ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் முகமது இசாக்,மண்டல செயலாளர் முஸ்தபா, மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம்,தொழிற்சங்க தலைவர் ரவூப் நிஸ்தார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் உசேன், மாவட்ட துணைதலைவர் அன்சர் செரீப், மாவட்ட செயலாளர்கள் இக்பால், மற்றும் உமர் செரீப்,செய்தி தொடர்பாளர் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க